Sunday, May 4, 2014

கருவேலமரங்களும் அரசியல் வா(வியா)திகளும் !

அரசியல் வியாதிகளும்
நமது அரசியல்வாதிகளும் தமிழகம் முழுவதும் செழித்து வளர்ந்து இருக்கும் காட்டு கருவேல மரங்களும் ஒன்று என்றால் மிகை இல்லை! காட்டு கருவேல மரங்கள் தான் இருக்கும் இடத்தில் தனது வேர்களை வெகு ஆழத்துக்கு பரப்பி தனக்கு தேவையான நீர் ஆதாரத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்வதுடன் காற்றில் நிறைந்துள்ள நீரையும் எடுத்துக்கொள்ளும்.

 அரசியல் வா(வியா)திகளும் அப்படிதான், அரசியலில் நுழையும் போது சைக்கிள் வாங்கவே துப்பில்லாமல் இருப்பவன், நுழைந்த சில மாதங்களிலேயே மக்கள் நல திட்டங்களில் திருடுவது  முதலாளிகளுடன் சேர்ந்து இயற்கை ஆதாரங்களை சுரண்டுவது கூட்டு கொள்ளை அடிப்பது  என்று  விதவிதமாக திருவாளர் பொது ஜனத்தை மொட்டை அடித்து   சுலபமாக,வெகு விரைவில் தெருகோடியில் இருந்தவன் கோடிகளில் புரள ஆரம்பிக்கும் மாயம் அதுவும் உடனடியாக நடைபெறும் வித்தை இந்தியாவில் மட்டுமே காணமுடியும்.

கருவேலமரம்
வளர்ந்த நாடுகளில் அங்கு இங்கு என்று ஊழல்கள் நடைபெறாமல் இல்லை ஆனால் அவர்கள் எல்லாம் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களில் கை வைப்பது இல்லை, நடை பெறும் ஊழல்கள் யாவும் அன்னிய நாடுகள் தொடர்புடைய இறக்குமதி மற்றும் ஆயுத பேரம் போன்றவையாய் மட்டுமே இருக்கும் . ஆனால் இங்கு மட்டுமே எல்லா மக்கள் நல திட்டங்களிலும் கொள்ளை அடிக்கும் இழிந்தவர்கள் நிறைந்துள்ளர்கள்.

இவ்வளவு ஊழல் அரசியல் வாதிகள் நாடுமுழுவதும் நிறைய என்ன காரணம் ? பொதுமக்களாகிய நாம் தான் நாம் மட்டுமே தான் காரணம் ! இன்றைய மக்கள் மனோபாவம் மிகவும் மாறியுள்ளது , ஆம் என் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்று நினைத்து சாலையில் தன் வீட்டு குப்பையை கொட்டும் மனோபாவம் தான் அதிகம்.

ஆக பொது விஷயங்களில் ஒரு நிலையும் தன் சொந்த விஷயங்களில் ஒருநிலையும் என ஒரே பிரச்சனைக்கு இரு வேறு அணுகுமுறை கொண்ட பொதுமக்களாகிய நாமே அனைத்துக்கும் மூல காரணம். ஊழலை பொறுத்த அளவில் மக்கள் மாறாதவரை அரசியல் வியாதிகளை மாற்ற முடியாது அரசியல் வியாதிகள் மாறாதவரை நாடும் நாட்டு மக்களும் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கமுடியாது !!!

0 comments:

Post a Comment