உலக அளவில் வெள்ளம் பற்றிய புராண இதிகாச கதைகள்
உலகத்தை விழுங்கிய பல்வேறு கதைகள் உலகஅளவில் பல்வேறு மொழிகளில் உள்ள இதிகாச புராண மற்றும் வாய் மொழி இலக்கியங்களில் காண கிடைகிறது. இவைகளை சற்று ஆராயும் நோக்கில் கூர்ந்து நோக்கினால், இவை ஒருவேளை கடந்த காலத்தில் உண்மையிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இன மக்களின் மனதில் இருந்து எழுந்தவையா? என்ற கேள்வி எழுகின்றது, நாமும் சற்று விரிவாக அலசி பார்போமா?
பைபளின் பழைய ஏற்பாடு கூறும் நோவாவும் அவன் பயணம் செய்த பேழையும் பற்றிய கதை கிமு 8 மற்றும் கிமு 6 வது நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இஸ்ரேல் மற்றும் யூதேய நாட்டில் வழங்கிவந்தது அதன் மூலக்கதை மெசபடோமியா ( இன்றைய ஈராக் )வில் வழங்கி வருகிறது.
சுமேரியாவில் கிமு 300 இல் வழங்கிவந்த கதையும், ஆதி காவியமான கில்மேஷ் கூறும் வெள்ளம் பற்றிய தகவல்களை கூறுகிறது.
மத்திய அமெரிக்காவில் உள்ள Mayan Indians எனும் மக்களின் புனித நூலிலும் நோவாவை போன்ற தாபி (Tapi) என்பவன் கதை கூறப்பட்டுள்ளது.
பெர்ஷிய மொழி இலக்கியமான வென்டிடாத் (vendidad) என்பதிலும் வெள்ளம் பற்றிய குறிப்புகள் காண கிடைகின்றன.
வடஇந்திய இலக்கியத்திலும் மனு எனும் வீரன் கதை காணக்கிடைக்கிறது.
ஆதி கிரேக்க கதைகளிலும் துகிலியான் (Deukalion) என்ற கதாபாத்திரம் காண கிடைக்கிறது.
சீனமொழி இலக்கியத்தில் ,தெற்கு கடல்பகுதி, ஆஸ்திரேலியா, பெருவில் உள்ள Inca மொழி, மற்றும் வடஅமெரிக்க ஆதி இலக்கியங்களிலும் இதே போன்ற கதைகளை பார்க்க முடிகிறது.
இந்த புராண இதிகாச கதைகள் எல்லாம் கடவுளர்கள் தீயவைகளை அழித்து நல்லவர்களை நிலை நிறுத்துவதாகவே காட்டுகின்றன. இந்த கதைகள் எல்லாம் வெள்ளம் பூமியை சுத்திகரிக்கும் ஒரு சக்தியாகவே உருவகபடுத்துகின்றன.
நமது கேள்வி என்னவென்றால், "உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்களின் இலக்கியங்கள் அனைத்தும் ஒரே விஷயத்தை பேசுவதால் உண்மையில் இப்படி ஒரு பேரழிவு நிகழ்ந்திருக்குமா?" என்பதே.
இந்த கேள்விக்கு அறிவியலார்கள் பின்வருமாறு பதிலளிகிறார்கள்.
அறிவியலார் கற்காலத்தின் துவக்கத்தில் தொடர்ந்து பெருமழை பெய்திருக்க வாய்ப்பு இருந்ததை ஒப்புகொண்டாலும் உலகமே நீரில் மூழ்கி இருக்க வாய்பில்லை என்றே உறுதிபட கூறுகின்றனர்.
பிரான்ச் நாட்டின் அறிவியலார் A.Capart ன் கருதுகோள்படி ஸ்காண்டிநேவியா தீபகற்பத்தில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றங்களினால் பனிக்கட்டிகள் உருகி வெள்ளம் ஏற்பட்டு இருக்கலாம்.
ஆனால் மொத்தத்தில் முடிந்த முடிவாக ஆய்வாளர்கள் கூறுவது என்னவெனில் Ice age இன் முடிவில் பொருளாதார மாற்றம் ஏற்பட்டது வேட்டையாடி வாழ்ந்த மனிதன் விவசாயம் செய்துவாழ தலைப்பட்டான், இதையே தான் பைபிளில் கூறப்படும் நோவா கதையும் உணர்த்துகிறது.நோவா கதையில் நோவா மிருகங்களையும் விதைகளையும் பாதுகாத்து வெள்ளம் வடிந்தபின் வேறு இடத்தில் வாழ தலைப்பட்டதாக கூறுவது தெரிவிப்பதாக கூறுகின்றனர்.
_____________________