Saturday, November 10, 2012
மக்கள் நல அரசு ???
இந்த தலைப்பு கேள்வி பட்ட வார்த்தைகளாய் தெரியுது இல்லையா ? ஆம் நமது மத்திய மாநில அரசுகள் மக்கள் நல அரசாக இந்திய அரசியல் அமைப்பு படி செயல் பட வேண்டும் ஆனால் உண்மையில் அப்படி செயல் படுகின்றனவா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இன்றைய அரசுகள் எல்லாமே ஒரு லாப நோக்கோடு செயல்படும் தொழில் நிறுவனம் போலவே செயல்படுகின்றன. மக்கள் நலம் என்ற வார்த்தையை அதன் பொருளை மறந்து தம் நலம் தம் மக்கள் நலம் என்ற நோக்கிலேயே செயல்படுகின்றன. மக்களின் தேவைக்கு மட்டுமே அரசு நிர்வாகம் என்ற நிலை மாறி அரசின் நலத்திற்கும் வசதிக்குமே மக்கள் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தப் படுகிறார்கள். உதாரணம் சொல்ல வேண்டுமானால் மின்கட்டண உயர்வு பேருந்து கட்டண உயர்வு இவற்றை குறிப்பிடலாம்.
ஆளுவோர் மக்கள் நலனுக்காக ஆளுவதில்லை தங்கள் 5 வருட ஆட்சி காலம் தங்கள் எண்ணப்படி அமைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. தற்போதைய கல்வி கொள்கை ஆகட்டும் , ஆன்லைன் வர்த்தக அனுமதி ஆகட்டும், பொது துறை பங்குகளை விற்பனை செய்வதாகட்டும் எல்லாமே தங்களின் சுய லாப நோக்கு அல்லது தாம் சார்ந்தவர்களின் நலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறார்கள் என்பதே உண்மை. தனது அன்றாட வயற்றுபட்டுக்கே தன் உழைப்பை விற்க வேண்டியிருக்கும் அன்றாடம் காய்ச்சி உண்மையில் தாம் ஏமாற்ற படுவது தெரிந்தும் கையறு நிலைமையில் எதுவும் செய்ய சக்தியற்று விரக்தியின் உச்சத்தில் நிற்கிறான் என்பதே உண்மை. மக்களின் அறிவை வளர்க்க பயன்பட வேண்டிய கல்வி, முதலாளிகளால் கடை சரக்காய் விற்கபடுகிறது. விற்கப்படும் கல்வியும் மக்களை பணம் சம்பாதிக்கும் எந்திரமாக மட்டுமே உருவாக்குகிறது. மக்கள் நலனில் மிக முக்கியமான "ஆரோக்கியம் " பெரு முதலாளிகளின் மருத்துவ மனைகளுக்கு குடிபெயர்ந்து விட்டன. எந்த ஒரு அரசியல் வாதியோ, உயர் அதிகாரிகளோ அல்லது அவர்கள் குடும்பத்தினரோ அரசு பொதுமருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சை பெறுகி றார்களா அல்லது அரசு கல்வி நிறுவனத்தில் தான் படிக்கிறார்களா ? அவர்களுக்கு தெரியும் தங்கள் நிர்வாகம் பற்றி.
-தொடரும் -
Subscribe to:
Posts (Atom)