நமது நாட்டை பொறுத்தவரை தென்பகுதி அதுவும் குறிப்பாக தமிழகம் என்றுமே அமைதி பூங்கா வாகத்தான் திகழ்ந்து வந்தது.ஆனால் இலங்கை வாழ் தமிழர்களின் முதுகில் இன்றைய ஆட்சி யாளர்கள் என்று குத்தினார்களோ; அன்றே நாட்டின் தென்பகுதி பாதுகாப்பு கேள்விகுறியாகி விட்டது. இலங்கை தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்தியர்களின், குறிப்பாக தமிழின துரோகிகளின் ஆதரவை பயன்படுத்திகொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் அதே சமயம் சீன பாகிஸ்தான் உடனான நட்பை கொல்லைபுறம் வழியாக பலப்படுத்தி கொண்டனர் .
தமிழ் போராளிகளை அழித்து ஒழிக்க ஆயுத உதவிகளை தாரளமாக செய்த சீனா தெற்கு இலங்கையில் ஒரு துறை முகத்தை நவீன படுத்துகிறது . நமது ஒட்டு பொறுக்கிகள் அவர்கள் துறைமுகத்தை அவர்கள் நவீன படுத்தினால் என்ன என்று கேள்வி கேட்பார்கள் , ஆனால் பாதுகாப்பு துறை வல்லுனர்களின் கருத்துப்படி மிக குறைந்த அவகாசத்தில் அந்த துறைமுகத்தை ஒரு அதிநவீன கப்பல் படை தளமாக சீனா வால் மாற்ற முடியும். இந்தியாவின் வடக்கில் அத்துமீறும் சீனா தற்போது தெற்கிலும் கால் பதிப்பது மிகவும் துரதிஷ்டவசமானது.இலங்கையில் சீனர்களின் நுழைவு நேரடியாக இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல். இலங்கையில் இருந்து தாக்கும் தொலைவில் தான் நமது அணுமின் அமைப்புகளும் மற்ற சில முக்கிய கேந்திரங்களும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சமிபகாலமாக சீனா இந்தியாவை மாநிலங்களவில் சிறுசிறு நாடுகளாக துண்டாட நினைக்கிறது . அப்படி அஸ்ஸாம் , அருணாச்சல், காஷ்மீர் என்று துண்டாடும் பட்சத்தில் சீனவின் நேரடி போட்டியான இந்தியாவை இல்லாமல் செய்துவிடமுடியும். அதன் ஒருபகுதியாகத்தான் காஷ்மீர் மக்களுக்கு தனி பாஸ்போர்ட் விசா என்று மறைமுக தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளுகிறது.
உள்நாட்டுக்குள் வெங்க விலை ஏறுவதே, ஆட்சி யாளர்களுக்கு தாமதமாகத்தான் உறைக்கும் நிலைமையில் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் வந்தபின் தான் விழிப்பார்கள் என்பதே உண்மை.
இதுமட்டும் அல்லாமல் பாகிஸ்தான் போர் வீரர்களுக்கு இலங்கையின் வடபகுதியில் கொரிலா போர் பயிற்சி பாசறைகளை அமைக்க இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
ஆக இந்தியாவின் அயல்நாட்டு கொள்கையானது ,( இலங்கை விசயத்தில்) நம் நாட்டின் நலனுக்கும் பாது காப்புக்கும் எதிரானது என்பதை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை.
என்ன? சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளுவது என்ற சொலவடை நினைவுக்கு வருகிறதா ?

0 comments:
Post a Comment