நம் நாட்டில் மட்டுமல்லாது இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விஷயம் பொதுவானது. என்று மனிதன் நாடோடி வாழ்க்கையை விட்டுவிலகி வசதியான நாகரிக வாழ்கை வாழத் தலைப்பட்டானோ அன்று துவங்கிய இது இன்றுவரை முடிவில்லாது தொடர்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் மனிதனை இரு வர்க்கமாக மட்டுமே பிரிக்கலாம். ஒன்று சுரண்டுவோர் மற்றொன்று சுரண்டபடுவோர். இந்த இரண்டும் மாறாத இரு பிரிவுகள். முதலாளித்துவ கட்டமைப்பில் முதலாளி உழைப்பளியை சுரண்டும் நிலை இருந்தது. தொழிலாளி வர்க்க அமைப்பில் உழைப்பாளி பணம் படைத்தவரை கட்டுப்படுத்தும் நிலைமை இருப்பினும் இரண்டிற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. இந்த விஷயத்தை உலக அளவில் பார்ப்பதை விட நம் நாட்டளவில் பார்ப்பது எனக்கும் உங்களுக்குமான புரிதலுக்கு எளிமையாய் இருக்கும் என்பதால் நாம் நாட்டளவில் மட்டும் இதை பார்போம்.
நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது இந்த வேறுபாடுகள் பெரியதாக இருந்தன. இந்த வேறுபாட்டை களைய அரசாங்கம் இந்த பிரச்சனையை கையில் எடுத்தது அதுவரையில் ஒரு இனத்தோடு மட்டும் போராடி வந்த சுரண்டபடுவோன் அதன் பிறகு அரசையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. புரியவில்லையா? சரி புரியும் படி சொல்கிறேன்.
முதன் முதலில் இந்த வேறுபாடுகளை களைய அரசு அரசுடமை , மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற வற்றில் இறங்கியது. துவக்கத்தில் அரசுஉடமை ஆக்கப்பட்ட வங்கிகளை மட்டும் உதாரணத்திற்கு பார்போம். அன்று அரசின் நோக்கம் சுரண்டலுக்கு எதிராக இருந்தது, எனவே அரசே கையகபடுத்தி சுரண்டலுக்கு எதிரான பணியை துவங்கியது. ஆனால் இன்று நிலைமை என்ன ?
இன்று இதே வங்கிகள் (அரசு ) மற்ற்றொரு சுரண்டும் இனமாக மாறிவிட்டது தான் சமுக அவலம். மக்கள் வசதிக்காக என்று துவங்கப்பட்ட வங்கிகள் வசதிகளை கொடுத்து அதிகம் சுரண்டுவது தான். இன்றைய அளவில் வங்கி கணக்கு இல்லாதோரே இல்லை என்பதால் இது எளிதில் புரியும் என நினைகிறேன்.
ஒரு நிலையில் அரசு நிர்வாக செலவுகளுக்காக மற்றும் மேம்பாடுகளுக்காக வரி விதிக்கப்பட்டது. இன்று எதில் எல்லாம் வரி போட்டு அரசு வருவாய் மேம்படுத்தலாம் என்று ஆராயவே குழுக்களை அமைக்கும் அவலம் காண முடிகிறது.
முன்னாளில் நிலக்கிழார்கள் தங்கள் உழை ப்பாளிகளை அடிமைப்படுத்த பயன் படுத்திய சாராய கடைகள் இன்று அரசாங்கத்தின் காமதேனுவாய் ,உழைப்பவன் உழைப்பால் வந்த வருமானத்தை சுரண்டுகின்றன.
இந்த சுரண்டல் பட்டியல் முடிய வில்லை...... ஆனால் தற்காலிகமாக முடித்து வைக்க படுகிறது